mariya

 

வாசகர்கள்

visitor counter  

 

 

 

Bielefeld பணித்தள உருவாக்கம்

 


1983 இனக்கலவரத்தின் பின் பாதுகாப்பு தேடி ஜரோப்பிய நாடுகளை நோக்கி புறப்பட்ட தழிழர்கள் 1984-1985 காலப்பகுதியில் Bielefeld நகரத்தில் அதிகளவு குடியமர்த்தப்பட்டனர். இவ்வாறு குடியமர்த்தப்பட்டவர்களில் கத்தோலிக்க மக்கள் தமது ஆன்மிக வளத்தை தம் தாய் மொழியில் பூர்த்தி செய்யும் ஆவலுடன் அப்பொழுது மக்களுடன் மக்களாக குடியமர்த்தப்பட்ட அருட்பணியாளர்களையும் உயர்கல்விக்கென ஜரோப்பிய நாடுகளில் வசித்து வந்த அருட்பணியாளர்களையும் காலத்துக்கு காலம் வரவழைத்து திருப்பலிகள் ஒப்புக்கொடுத்தும் வழிபாடுகள் செய்தும் தமது மொழி வடிவிலான வழிபாடுகளை பாதுகாக்க முனைந்தனர்.

இவ்வகையில் அருட்பணியாளர் தேவராஜா அவர்களால் 1986ம் ஆண்டு ஜப்பசி மாதம் Bielefeld இல் உள்ள Ummeln என்னும் கிராமத்தில முதல் திருப்பலி;யை ஒப்புக்கொடுத்து இப் பங்கு உருவாக காரணமானார்.

 

அதனை தொடர்ந்து விடுமுறை காலங்களில் யேர்மனுக்கு வருகை தந்த பணியக இயக்குனராகிய அருட்பணியாளர் ஜெயசேகரம் அவர்கள் யேர்மனியில் வாழும் மக்களை ஒன்று சேர்ப்பதிலும், அவ்வப்பொழுது திருப்பலி ஒப்புக்கொடுப்பதிலும; மக்களுக்கு உதவி செய்வதிலும;, யாழ் ஆயர் தியோகுப்பிள்ளை ஆண்டகை ஜரோப்பிய நாடுகளுக்கு வருகை தரும் பொழுது கத்தோலிக்க மக்கள் செறிந்து வாழும் பகுதிகளுக்கு ஆயர் அவர்களை அழைத்துச் சென்று திருப்பலி ஒப்புக்கொடுப்பதிலும் மக்கள் தொடர்பை ஏற்படுத்துவதிலும் ஆர்வம் காட்டி வந்தார்.

அதனை தொடர்ந்து தமிழர்களுக்கான மொழி வழிபாட்டினை பேணிக்காக்க யேர்மன் ஆயர் சங்கத்தின் அனுமதி 1987ம் ஆண்டு மாசி மாதம் கிடைக்கப்பெறவே Bielefeld பணித்தளமும் இணைக்கப்பட்டு யேர்மன் கத்தோலிக்க ஆன்மிக பணியகம் உருவாக்கப்பட்டது.

 

அதனை தொடர்ந்து Bielefeld பணித்தளம் பல்வேறு வளர்ச்சிகளை கண்டு சிறப்பாக செயற்பட்டு வருகின்றது.