mariya

 

வாசகர்கள்

visitor counter  

 

 

பொது செபங்கள்

 

 

1. மூவொரு கடவுள் புகழ் (திரித்துவப்புகழ்) :


பிதாவுக்கும், சுதனுக்கும், பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக. ஆதியிலே இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. -ஆமென்

 

 

2.திருச்சிலுவை அடையாள செபம்:


அர்ச்சியசிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும். எங்கள் சர்வேசுரா, பிதா, சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே. -ஆமென்.

 

 

3.கிறிஸ்து கற்பித்த செபம் :


பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக. உம்முடைய இராட்ச்சியம் வருக. உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல, பூலோகத்திலும் செய்யப்படுவதாக.
எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும். எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல, எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களைச் சோதனையில் விழவிடாதேயும். தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும். -ஆமென்.

 

 

4.மங்கள வார்த்தை செபம் :


அருள் நிறைந்த மரியே வாழ்க! கர்த்தர் உம்முடனே. பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.
அர்ச்சிஸ்ட மரியாயே, சர்வேசுரனுடைய மாதாவே பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும். -ஆமென்.

 

 

5. திவ்ய நற்கருணை ஆராதனை :


நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்ய நற்கருணைக்கு, சதா காலமும், ஆராதனையும் ஸ்துதியும் தோஸ்திரமும் நமஸ்காரமும் உண்டாகக்கடவது.

 

 

6.விசுவாச அறிக்கை :


பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன். அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கிறேன். இவர் பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய் உற்பவித்து கன்னிமரியிடமிருந்து பிறந்தார். போஞ்சுபிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு, மரித்து அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். பரலோகத்திற்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கம் வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க வருவார். பரிசுத்த ஆவியை விசுவசிக்கிறேன். பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன். அர்ச்சியசிஷ்டவர்களுடைய சமூதீதப் பிரயோசனத்தை விசுவசிக்கிறேன். பாவப்பொறுத்தலை விசுவசிக்கிறேன். சரீர உத்தானத்தை விசுவசிக்கிறேன். நித்திய சீவியத்தை விசுவசிக்கிறேன். ஆமென்.

 

 

7.இறைவனின் இயல்பு :


1.இறைவன் தாமாய் இருப்பவர்.
2.அவருக்கு தொடக்கமும் முடிவும் இல்லை.
3.அவருக்கு உடல் கிடையாது.
4.அளவில்லாத நன்மைகள் அனைத்தும் நிறைந்துள்ளார்.
5.எங்கும் நிறைந்திருக்கிறார்.
6.அனைத்திற்கும் முதற்காரணமாய் இருக்கிறார்.

 

 

 

8.கடவுளின் கட்டளைகள்:


இறைவன் நமக்கருளிய கட்டளைகள் பத்து.
1. உன் ஆண்டவராகிய கடவுள் நாமே. நம்மைத்தவிர வேறு கடவுள் இல்லை.
2. கடவுளின் திருப்பெயரை வீணாகச் சொல்லாதே.
3. கடவுளின் நாட்களைப் புனிதமாக அனுசரி.
4. தாய், தந்தையை மதித்துப் பேணு.
5. கொலை செய்யாதே.
6. மோக பாவம் செய்யாதே.
7. களவு செய்யாதே.
8. பொய் சாட்சி சொல்லாதே.
9. பிறர் தாரத்தை விரும்பாதே.
10. பிறர் உடைமையை விரும்பாதே.
இந்தப் பத்துக் கட்டளைகளும் இரண்டு கட்டளைகளில் அடங்கும்ளூ

அனைத்திற்க்கும் மேலாகக் கடவுளை அன்பு செய்.

உன்னை நீ அன்பு செய்வது போல, அனைவரையும் அன்பு செய்.

 

 

 

 

9.திருச்சபையின் விதிமுறைகள்:


1. ஞாயிற்றுக் கிழமைகளிலும், கடன் திருநாட்களிலும் திருப்பலி ஒப்புக் கொடு.
2. ஆண்டுக்கு ஒரு முறையாவது ஒப்புரவு அருட்சாதனத்தைப் பெறுக.
3. பாஸ்கா காலத்தில் ஒப்புரவு அருட்சாதனத்தில் பங்கு கொண்டு, நற்கருணை உட்கொள்.
4. குறிப்பிட்ட நாட்களில் புலால் தவிர்த்து, நோன்பு போன்ற தவ முயற்சிகளை மேற்கொள்.
5. குறைந்த வயதிலும், நெருங்கிய உறவிலும் திருமணம் செய்யாதே.
6. உன் ஞான மேய்ப்பர்களுக்கு உன்னாலான உதவி செய்.

 

 

 

 

10.சுருக்கமான மனத்துயர் செபம்:


என் இறைவனாகிய தந்தையே! நீர் நன்மை நிறைந்தவர், எனவே எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் அன்பு செய்கிறேன்.என் பாவங்களால் உமது அன்பை மறந்ததற்காக மனம் வருந்துகிறேன்.உமது அருளுதவியால் இனிமேல் பாவம் செய்வதில்லையென்று உறுதி கூறுகிறன். ஆமென்.

 

 

 

11.ஒப்புரவு அருட்சாதனத்தில் சொல்லத்தகும் மனத்துயர் செபம்:

 


என் இறைவா, நன்மை நிறைந்தவர் நீர். அனைத்திற்கும் மேலாக அன்புக்கு உரியவர் நீரே. என் பாவங்களால் உம்மை மனநோகச் செய்துவிட்டேன். ஆகவே, நான் குற்றங்கள் பல செய்தேன் எனவும், நன்மைகள் பல செய்யத் தவறினேன் எனவும், மனம் நொந்து வருந்துகிறேன்.
உமது அருள் துணையால் நான் மனம் திரும்பி இனிமேல் பாவம் செய்வதில்லை என்றும், பாவத்துக்கு ஏதுவான சூழ்நிலைகளை விட்டு விலகுவேன் என்றும் உறுதி கொடுக்கிறேன்.
எங்கள் மீட்பராம் இயேசு கிறிஸ்துவின் பாடுகளின் பயனாக, இறைவா, என்மேல் இரக்கமாயிரும். ஆமென்.

 

 

 

 

12. நீண்ட மனத்துயர் செபம்:


என் சர்வேசுரா சுவாமி தேவரீர் அளவில்லாத சகல நன்மையும் அன்பும் நிறைந்தவராய் இருப்பதினால் எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் முழுமனதுடனே நேசிக்கிறேன். இப்படிப்பட்ட தேவரீர்க்குப் பொருந்தாத பாவங்களைச் செய்தேனே என்று மிகவும் மனம் நொந்து மெத்த மனஸ்தாபப்படுகிறேன். எனக்கிதுவே மனஸ்தாபம் இல்லாமல் வேறு மனஸ்தாபமில்லை. எனக்கிதுவே துக்கமில்லாமல் வேறு துக்கமில்லை. இனிமேல் ஒருபொழுதும் இப்படிப்பட்ட பாவங்களைச் செய்வதில்லை என்று உறுதியான மனதுடனே பிரதிக்கினை செய்கிறேன். மேலும் எனக்குப் பலன் போதாமையால் இயேசுநாதர் சுவாமி பாடுபட்டு சிந்தின திருஇரத்தப் பலன்களையெல்லாம் பார்த்து, என் பாவங்களை எல்லாம் பொறுத்து, எனக்கு உம்முடைய வரப்பிரசாதங்களையும், மோட்ச பாக்கியத்தையும் தந்தருள்வீரென்று முழுமனதுடனே நம்பியிருக்கிறேன். திருச்சபை விசுவசித்து கற்பிக்கின்ற சத்தியங்களை எல்லாம் தேவரீர் தாமே அறிவித்த படியினால் நானும் உறுதியாக விசுவசிக்கின்றேன் -ஆமென்.

 

 

 

13. காணிக்கை செபம்:


இயேசுவின் திரு இருதயமே! நாங்கள் கட்டிக்கொள்ளும் துரோகங்களுக்குப் பரிகாரமாகவும் தேவரீர் திருப்பீடத்தில் ஓயாமல் உம்மைத்தானே பலியாக ஒப்புக்கொடுக்கும் சகல கருத்துக்களுக்காகவும், அடியேல் இன்று செய்யும் ஜெபங்களையும், கிரியைகளையும், படுந்துன்ப வருத்தங்களையும், தூய கன்னிமரியாயின் மாசில்லாத திரு இருதயத்தின் வழியாக உமக்கு ஒப்புக்கோடுக்கிறேன் சுவாமி.
இந்த மாதத்திற்கும் இந்த நாளுக்கும் சபையாருக்கும் குறிக்கப்பட்ட சகல கருத்துக்களுக்காகவும் விசேஷமாய் அவைகளை ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி -ஆமென்.

 

 

 

 

14. காவல் தூதரை நோக்கி செபம்:


எனக்குக் காவலாய் இருக்கிற சர்வேசுரனுடைய சம்மனசானவரே ! தெய்வீக கிருபையால் உம்மிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட எனக்கு ஞான வெளிச்சம் கொடுத்து என்னைக் காத்து வழிநடத்தி ஆண்டருளும். -ஆமென்.

 

 

 

15. அனுதின வேலைகளை ஒப்புக் கொடுக்கும் செபம்:


தெய்வீகத் தொழிலாளியாகிய இயேசுவே, அடியேன் இன்று செய்யும் ஜெபங்களையும், தொழில்களையும், எனக்கு ஏற்படும் களைப்பு,ஆயாசம், துன்ப வருத்தங்கள் அனைத்தையும், தொழிலாளிகளின் மனந்திரும்புதலுக்காகவும், அர்ச்சிப்புக்காகவும் தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன். -ஆமென்.
இயேசுவின் திரு இருதயமே, உமது அரசு வருக !
நாசரேத்து அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
தொழிலாளரின் மாதிரியாகிய புனித சூசையப்பரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

 

 

 

 

16. உணவருந்துமுன் செபம்:

 


சர்வேசுரா சுவாமி! என்னையும் உமதருளினால் நான் உண்ணப்போகும் இந்த உணவையும் எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து ஆசீர்வதித்தருளும் -ஆமென்

 

 

 

 

17. உணவருந்திய பின் செபம்:

 


சதாகாலத்துக்கும் நித்தியருமாய் இராச்சிய பரிபாலனம் பண்ணுகிறவருமாயிருக்கிற சர்வ வல்லபமுள்ள இறைவா! தேவரிர் எனக்குத் தந்தருளின இந்த ஆகாரங்களுக்காகவும் தேவரிர்; எனக்குச் செய்துவருகிற சகல உபகாரங்களுக்காகவும் தேவரீருக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகிறேன்.
இப்பொழுதும் எப்போழுதும் ஆண்டவருடைய திரு நாமம் வாழ்த்தப்படக்கடவது.
ஜெபிப்போமாக
சர்வேசுரா சுவாமி! எங்களுக்கு உபகாரம் பண்ணுகிறவர்களுக்கெல்லாம் நித்திய ஜீவியத்தைக் கட்டளையிட்டருள அனுக்கிரகம் பண்ணியருளும் சுவாமி -ஆமென்
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாரக் கடவது -ஆமென்

 

 

 

 

18. வேலை துவங்குமுன் செபம்:

 


தூய ஆவியே தேவரீர் எழுந்தருளிவாரும். உம்முடைய விசுவாசிகளுடைய இருதயங்களை நிரப்பும். அவைகளில் சிநேக அக்கினியை மூட்டியருளும். உம்முடைய ஞானக் கதிர்களை வரவிடும். அதனால் உலகத்தின் முகத்தைப் புதுப்பிப்பீர்.
ஜெபிப்போமாக
சர்வேசுரா சுவாமி! விசுவாசிகளுடைய இருதயங்களை பரிசுத்த ஆவியின் பிரகாசத்தால் படிப்பித்தருளினீரே. அந்த பரிசுத்த ஆவியினால் சரியானவைகளை உணரவும், அவருடைய ஆறுதலால் எப்பொழுதும் மகிழ்ந்திருக்கவும் அனுக்கிறகம் செய்தருளும். இவைகளையெல்லாம் எங்களாண்டவராகிய இயேசு கிறிஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து தந்தருளும் -ஆமென்.

 

 

 

 

19. வேலை முடிந்தபின் செபம்:


சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே! இதோ உம்முடைய சரணமாக ஓடிவந்தோம். எங்கள் அவசரங்களிலும் நாங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு நீர் பாராமுகமாயிராதேயும். ஆசீர்வதிக்கப்பட்டவளுமாய் மோட்சம் உடையவளுமாயிருக்கிற நித்திய கன்னிகையே சகலஆபத்துக்களிலேயும் நின்று எங்களை தற்காத்தருளும். -ஆமென்.

 

 

 

 

20.மூவேளைச் செபம்:


ஆண்டவருடைய தூதர் மரியாவுக்கு தூதுரைத்தார்
தூய ஆவியால் அவர் கருத்தரித்தார் - அருள் நிறை
இதோ ஆண்டவரின் அடிமை
உம் சொற்படியே எனக்கு ஆகட்டும் - அருள் நிறை
வாக்கு மனிதர் ஆனார்
நம்மிடையே குடிகொண்டார் - அருள் நிறை
கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும்படி
இறைவனின் தூய அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
செபிப்போமாக
இறைவா! உம் திருமகன் மனிதன் ஆனதை உம்முடைய வானதூதர் வழியாக அறிந்திருக்கின்றோம். அவருடைய பாடுகளினாலும், இறப்பினாலும் நாங்கள் உயிர்ப்பின் மகிமை பெற உமது அருளைப் பொழிவீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.

 

 


21. பாஸ்கு காலத்தில் மூவேளை செபம்:


விண்ணக அரசியே அகமகிழ்க - அல்லேலூயா
உம் திருவயிற்றில் கிறிஸ்துவைக் கருத்தரித்தீர் - அல்லேலூயா
கன்னிமரியே, அகமகிழ்ந்து அக்களிப்பீர் - அல்லேலூயா
எனெனில் ஆண்டவர் மெய்யாகவே உயிர்த்தெழுந்தார் - அல்லேலூயா
செபிப்போமாக
இறைவா! உம்முடைய திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பினாலே உலகம் மகிழ அருள்புரிந்தீரே! அவருடைய அன்னையாம் கன்னிமரியின் வேண்டுதலால் நாங்கள் முடிவில்லாப் பேரின்ப வாழ்வைப் பெற அருள்வீராக. எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம் ஆமென்.

 

 

 

 

22 இயேசுவின் திருக்கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட செபம்

 

;

இயேசுவின் நேச இருதயமே! உம் இருதயத்தின் அருள் சுடர் ஒளியிலிருந்து என் விசுவாச ஒளியைப் பெற்று நான் வாழ, என்னை உமக்கு நிரந்தரமாக அர்பணிக்கிறேன்.

நமது திவ்விய இரட்சருடைய கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட செபத்தின் வரலாறு

கர்த்தர் பிறந்த 803ஆம் வருடத்தில் நமது ஆண்டவருடைய திருக்கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட இப்பரிசுத்த ஜெபமானது, பரிசுத்த பாப்பரசரால், சார்லஸ் என்னும் ராஜாவானவர் யுத்தத்திற்குப் போகும்போது அவர் யாதொரு தீங்குக்குள்ளாகாமல் சுகமே மீண்டும் வர அவருக்கு கொடுக்கப்பட்டது. இப்புனித செபத்தை யாதொருவர் பிரதி தினமும் செபித்தாலும் காதால் கேட்டாலும் அல்லது அவர்களண்டையில் வைத்துக் கொண்டிருந்தாலும் அவர்கள் சடுதி மரணத்தால் சாகமாட்டார்கள். கர்ப்ப வேதனைப்படும் எந்த ஸ்திரீகளும் இதை செபித்தால் அவர்கள் யாதொரு துன்பமின்றி பிரசவிப்பார்கள். பிறந்த குழந்தையின் வலது பக்கத்தில் இந்த செபத்தை வைத்திருந்தால் யாதொரு ஆபத்தும் நேரிடாது. இசிவு உண்டாகிறவர்களின் வலதுபுறத்தில் இதை வைத்திருந்தால் அவர்கள் உடனே எழுந்து ஆண்டவரை தோத்தரிப்பார்கள். இதை செபித்து வரும் எந்த வீடும் ஆண்டவருடைய ஆசீர்வாதத்தால் நிறையும். இதை எப்போழுதும் கூடவே வைத்துக் கொண்டிருப்பவர் மின்னல் இடி முழக்கங்களுக்கெல்லாம் தப்பி வாழ்வார்கள். இவர்கள் மரண நாள் நெருங்குகையில் மூன்று நாள் முன்னதாகவே எச்சரிப்புக்குள்ளாவார்கள் என்று அனேக வேத பாரகர்கள் எழுதிவைத்திருக்கிறார்களென்று சொல்லப்படுகிறது.

 

 

செபம்:

ஆ! மிகவும் வந்திக்கத்தக்க கர்தாவும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவே! எங்கள் பெரும் பாவத்திற்காக, கொலைக்களத்தில் உண்மையாகவே இறந்தீர். ஆ! கிறிஸ்து இரட்சகருடைய பரிசுத்த சிலுவையே எங்கள் நினைவுகளைக் கவனியும். ஆ! ஆண்டவருடைய பரிசுத்த சிலுவையே எந்த ஆயுத அபாயங்களுக்கும் எங்களைத் தப்புவியும். ஆ! கர்த்தருடைய பரிசுத்த சிலுவையே, சகல துன்பங்களினின்றும் காப்பாற்றும். ஆ! இயேசு இரட்சகரின் பரிசுத்த சிலுவையே, எங்கள் எதிரிகளிடமிருந்து எங்களை பாதுகாத்தருளும். ஆ! எங்கள் கர்த்தருடைய பரிசுத்த சிலுவையே! எங்கள் அபாய மரணத்தினின்று எங்களைக் காப்பாற்றி நித்திய ஜீவனைத் தந்தருளும். ஆ! சிலுவையில் அறையுண்ட நசரேனாகிய இயேசுநாதரே, எப்பொழுதும் எங்கள்மீது இரக்கம் வையும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துநாதருடைய மகிமையாலும் அவருடைய பாடுகளாலும் உயிர்த்தெழுதலினாலும் தெய்வத்தன்மைக்குரிய மோட்ச ஆரோகணத்தினாலும், எங்களைப் பரலோகத்தில் சேர்க்க உண்மையாகவே அந்த நாளில் மாட்டுத்தொழுவத்தில் பிறந்தீர். மெய்யாகவே நீர் பிறந்த பதிமூன்றாம் நாள் மூன்று இராஜாக்களால் தூபம், பொன், வெள்ளைப்போளம் முதலிய காணிக்கை அளிக்கப்பட்டீர். பெரிய வெள்ளிக்கிழமையில் கல்வாரி மலையின் மேல் சிலுவையில் அறையப்பட்டு, உயிர்விட்டு, நிக்கோதேமு, சூசை எனும் பக்கர்களால் சிலுவையினின்று இறக்கி அடக்கம் செய்யப்பட்டீர். மெய்யாகவே நீர் மோட்சத்திற்கு எழுந்தருளினீர். ஆகவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நாதருடைய மகிமையானது எங்களை சத்துருக்களுடைய வஞ்சனைகளினின்றும் இப்போதும் எப்போதும் காப்பாற்றும். ஆ! ஆண்டவராகிய இயேசுவே! எங்கள்மீது கிருபையாயிரும். புனித மரியாயே, புனித சூசையப்பரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ............ (வேண்டியதை உறுதியாகக் கேட்கவும்).

 

ஆ! கர்தராகிய இயேசுவே, உம்முடைய பாடுகளின் வழியாய் இந்த பாவ உலகத்தினின்றும் உம்முடைய ஆத்துமம் பிரிந்தது உண்மையே. அப்படியே நாங்களும் எங்கள் வாழ்வில், நாங்கள் படும் துன்பங்களை உமது இரக்கத்தின் கண்கொண்டு பாரும். எங்கள் பாடுகளை யாதொரு பழியும் கூறாமல் பொறுமையோடு சகிக்க கிருபை கூர்ந்தருளும். உமது பாடுகளின் மூலமாக எங்களுக்கு நேரும் எல்லா இடையூறுகளிலும் இப்போதும் எப்போதும் எங்களைத் தப்புவியும் -ஆமென்.

 

செபிப்போமாக:
எங்கள் சர்வேசுரா சுவாமி! தேவரீர் வார்தைப்பாடு கொடுத்தபடியினாலே இயேசுநாதர் சுவாமி பாடுபட்டுச் சிந்தின திருஇரத்தப் பலன்ளைப் பார்த்து எங்கள் பாவங்களையெல்லாம் பொறுத்து, உங்களுக்கு உம்முடைய வரப்பிரசாதங்களையும் மோட்ச பாக்கியத்தையும் தந்தருள்வீர் என்று உறுதியாக நம்பியிருக்கிறோம். -ஆமென்