mariya

 

வாசகர்கள்

visitor counter  

 

 

 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

06.10.2019

நற்செய்தி வாசகம்

லூக்கா நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 27-28

 

அக்காலத்தில் இயேசு மக்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது, கூட்டத்திலிருந்து பெண் ஒருவர், "உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்'' என்று குரலெழுப்பிக் கூறினார். அவரோ, "இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

 

இயேசுவின் வாழ்க்கை காட்டும் பாதை

 

வாழ்க்கையை எப்படியும் வாழலாம், இந்த வாழ்க்கை எதற்கு? வாழ்வதை விட மடிந்துவிடுவதே மேல்? நானும் வாழக்கூடாது? நீயும் வாழக்கூடாது? இந்த வாழ்க்கையே வீண்? கடவுள் ஏன் தான்இ இந்த உலகத்தைப் படைத்துஇ வாழ்க்கையைக் கொடுத்தாரோ? இதெல்லாம், இன்றைய உலகில், வாழ்வைப்பற்றி, மனிதனின் வெவ்வேறான பார்வைகளாக இருக்கிறது. ஆனால், வாழ்க்கையை நாம் எப்படி அமைக்க வேண்டும்? ஒருவருடைய வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? எப்படி வாழப்பட வேண்டும் என்பதற்கு இயேசு சிறந்த உதாரணமாக இருக்கிறார்.

இயேசுவின் வாழ்க்கை மற்றவர்கள் பாராட்டக்கூடிய வாழ்க்கை மட்டுமல்ல, மற்றவர்கள் பரிகசிக்கக்கூடிய வாழ்வாகவும் இருந்தது. இந்த உலகத்தில் நாம் மற்றவர்களின் பரிகாசத்திற்குத்தான் பயப்படுகிறோம். எவ்வளவோ செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஆனால், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள், என்கிற எண்ணம் அதனை நிறைவேற்றுவதற்கு நமக்குத் தடையாக அமைந்துவிடுகிறது. பல வேளைகளில் அடுத்தவர் தான், நமது வாழ்வை தீர்மானிக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள். இதுதான், நமது வாழ்வை சிறப்பாக வாழ்வதற்கு, மிகப்பெரிய தடைக்கற்களாக இருக்கிறது. இயேசு அந்த தடைகளை வெகு எளிதாக உடைத்துவிடுகிறார். தடைகளைத்தாண்டிச் செல்கிறார்.

நமது வாழ்க்கையிலும், அடுத்தவரைப்பற்றி எண்ணாது, நமது வாழ்வு எப்படி வாழப்பட வேண்டும் என்று நினைப்போம். நமது வாழ்வை சிறப்பாக வாழ நாம் உறுதி எடுப்போம். மற்றவர்களின் பரிகாசமோ, தேவையற்ற பேச்சுக்களோ நமது வாழ்வை மாற்றயமைக்காமல், நாம் வாழக்கூடிய வாழ்வாக இருக்க, இறையருள் வேண்டுவோம்.

 

 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

06.10.2019

நற்செய்தி வாசகம்

லூக்கா நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 5-10

 

அக்காலத்தில் திருத்தூதர்கள் ஆண்டவரிடம், "எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்'' என்று கேட்டார்கள். அதற்கு ஆண்டவர் கூறியது: ஹஹகடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்தக் காட்டு அத்தி மரத்தை நோக்கி, 'நீ வேரோடே பெயர்ந்துபோய்க் கடலில் வேரூன்றி நில்' எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும். உங்கள் பணியாளர் உழுதுவிட்டோ மந்தையை மேய்த்துவிட்டோ வயல்வெளியிலிருந்து வரும்போது அவரிடம், 'நீர் உடனே வந்து உணவருந்த அமரும்' என்று உங்களில் எவராவது சொல்வாரா? மாறாக, 'எனக்கு உணவு ஏற்பாடு செய்யும்; உம் இடையை வரிந்துகட்டிக் கொண்டுஇ நான் உண்டு குடிக்கும்வரை எனக்குப் பணிவிடை செய்யும்; அதன் பிறகு நீர் உண்டு குடிக்கலாம்' என்று சொல்வாரல்லவா? தாம் பணித்ததைச் செய்ததற்காக அவர் தம் பணியாளருக்கு நன்றி கூறுவாரோ? அது போலவேஇ நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின்இ ஹநாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்' எனச் சொல்லுங்கள்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

பணி செய்து நிறைவடைவோம்

 

நாம் மன நிறைவோடு வாழ இன்று இயேசு சொல்லும் செய்தி சிறப்பான ஒன்று. 'நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்'(லூக்17'10) என்ற மனநிலை நமக்கு எப்பொழுதும் வேண்டும்.

இன்று வாழ்க்கை நிம்மதியற்றுப் போவதற்குக் காரணம் வீணான எதிர்பார்ப்புஇஅதனால் அதைத் தொடர்ந்து வரும் ஏமாற்றம், அதன் தொடர்ச்சியான விரக்தி, அதன் விளைவு உடல்நோய்இ மன நோய். நான் பணியாளன், தொண்டன் என்ற உணர்வு மேN;லாங்கிவிடுகிறபோது இவை அனைத்துக்கும் இடமே இல்லை. எனவே வாழ்வில் நிறைவும் நிம்மதியும் இருக்கும்.

நாம் இறைவனின் பணியாட்கள் என்ற எண்ணம் முன்னிலையில் இருந்தால், குடும்பத்தில் மனைவி மக்களுக்கு அன்புடன் பணிசெய்வதை பெருமையென கொள்வோம். அலுவலகத்தில் உள்ளோரைச் சகோதர சகோதரியாகக் காண்போம்.அண்டை அயலாரை அன்பர்களாகக் கருதுவோம். ஆண்டவனும் பாராட்டுவான். அனைவரும் வாழ்த்துவர். மனதில் மகிழ்ச்சி நிறையும்.

நான் ஒரு பணியாள், என் கடமையை நான் செய்கிறேன் என்ற எண்ணம் நமக்குள் இருந்தால் நம் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்.

 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

29.09.2019

நற்செய்தி வாசகம்

லூக்கா நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 19-31

 

அக்காலத்தில் இயேசு பரிசேயரிடம் கூறியது:''செல்வர் ஒருவர் இருந்தார். அவர் விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார். இலாசர் என்னும் பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார். அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார். அவர் செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தம் பசியாற்ற விரும்பினார். நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும். அந்த ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். செல்வரும் இறந்தார். அவர் அடக்கம் செய்யப்பட்டார். அவர் பாதாளத்தில் வதைக்கப்பட்டபோது அண்ணாந்து பார்த்துத் தொலையில் ஆபிரகாமையும் அவரது மடியில் இலாசரையும் கண்டார். அவர், 'தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும்; இலாசர் தமது விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச் செய்ய அவரை அனுப்பும். ஏனெனில் இந்தத் தீப்பிழம்பில் நான் மிகுந்த வேதனைப் படுகிறேன்' என்று உரக்கக் கூறினார். அதற்கு ஆபிரகாம், 'மகனேஇ நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய்; அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக்கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய். அன்றியும் எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பெரும் பிளவு ஒன்று உள்ளது. ஆகையால் இங்கிருந்து ஒருவர் உங்களிடம் வர விரும்பினாலும் கடந்து வர இயலாது. அங்கிருந்து நீங்கள் எங்களிடம் கடந்து வரவும் இயலாது' என்றார். அவர், 'அப்படியானால் தந்தையே' அவரை என் தந்தை வீட்டுக்கு அனுப்புமாறு உம்மிடம் வேண்டுகிறேன். எனக்கு ஐந்து சகோதரர்கள் உண்டு. அவர்களும் வேதனை மிகுந்த இந்த இடத்திற்கு வராதவாறு அவர் அவர்களை எச்சரிக்கலாமே' என்றார். அதற்கு ஆபிரகாம்இ ஹமோசேயும் இறைவாக்கினர்களும் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்குச் செவிசாய்க்கட்டும்' என்றார். அவர்இ ஹஅப்படியல்ல, தந்தை ஆபிரகாமே, இறந்த ஒருவர் அவர்களிடம் போனால் அவர்கள் மனம் மாறுவார்கள்' என்றார். ஆபிரகாம்இ ஹஅவர்கள் மோசேக்கும் இறைவாக்கினருக்கும் செவிசாய்க்காவிட்டால், இறந்த ஒருவர் உயிர்த்தெழுந்து அவர்களிடம் போனாலும் நம்பமாட்டார்கள்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

 

செல்வரும், இலாசரும் உவமை நமக்கு அருமையான சிந்தனைகளைத் தருகிறது. செல்வரைப்பற்றிய உயர்ந்த பார்வையும், ஏழைகளைப்பற்றிய தாழ்ந்த பார்வையும் இங்கே தவிடுபொடியாகிறது. இங்கு தீர்ப்பிடப்படுவது நோக்கமாக இருக்கவில்லை. மாறாகஇ இந்த சமூகத்தின் மட்டில் நமக்கு அக்கறை வேண்டும் என்கிற எண்ணத்தை இது வெளிப்படுத்துவதாக இருக்கிறது.

பணக்காரனின் தவறாக இங்கே சித்தரிக்கப்படுவது அக்கறையின்மை. இந்த உலகத்தைப்பற்றிய அக்கறையின்மை. துன்பத்தைப் பார்த்தும்இ உதவி செய்ய ஆற்றல் இருந்தும் ஒருவிதமான பாராதத்தன்மைஇ மற்றவர்களின் வறுமையைப்பார்த்தும் உணர்வற்ற தன்மை. இவைதான் செல்வந்தனின் தண்டனைக்குக்காரணம். தன் கண்முன்னே ஒருவன்இ சாகக்கிடக்கிறான் என்பது தெரிந்தாலும்இ அதைப்பற்றிய சிறிதும் கவனம் எடுக்காத அவனுடைய உணர்வுகள் நிச்சயமாகத் தண்டிக்கப்படக்கூடியவை.

இந்த உலகத்தோடு நாமும் ஒருவகையில் இணைந்தவர்கள் தான். நமக்கும் இந்த உலகத்தின் மீது அக்கறை இருக்க வேண்டும். நாம் விரும்பாவிட்டாலும், அதை நமது வாழ்வில் வெளிப்படுத்தியே ஆக வேண்டும். இல்லையென்றால், அதுவே நமது அழிவுக்குக் காரணமாகிவிடும்.

 

 

 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

22.09.2019

நற்செய்தி வாசகம்

லூக்கா நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 1-13

 

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: ஹஹசெல்வர் ஒருவருக்கு வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப் பட்டது. தலைவர் அவரைக் கூப்பிட்டுஇ ஹஉம்மைப் பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய் இருக்க முடியாது' என்று அவரிடம் கூறினார். அந்த வீட்டுப் பொறுப்பாளர்இ ஹநான் என்ன செய்வேன்? வீட்டுப் பொறுப்பிலிருந்து என் தலைவர் என்னை நீக்கிவிடப் போகிறாரே! மண் வெட்டவோ என்னால் இயலாது; இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறது. வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிடும்போது பிறர் என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்ய வேண்டும் என எனக்குத் தெரியும்' என்று அவர் தமக்குள்ளே சொல்லிக் கொண்டார். பின்பு அவர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக வரவழைத்தார். முதலாவது வந்தவரிடம்இ ஹநீர் என் தலைவரிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?' என்று கேட்டார். அதற்கு அவர்இ ஹநூறு குடம் எண்ணெய்' என்றார். வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம்இ ஹஇதோ உம் கடன் சீட்டு; உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும்' என்றார். பின்பு அடுத்தவரிடம்இ ஹநீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?' என்று கேட்டார். அதற்கு அவர்இ ஹநூறு மூடை கோதுமை' என்றார். அவர்இ ஹஇதோஇ உம் கடன் சீட்டு; எண்பது என்று எழுதும்' என்றார். நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல் பட்டதால்இ தலைவர் அவரைப் பாராட்டினார். ஏனெனில்இ ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்து கொள்ளுகிறார்கள். ஆகையால்இ நான் உங்களுக்குச் சொல்கிறேன்: நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்பொழுது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக்கொள்வார்கள். மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார். நேர்மையற்ற செல்வத்தைக் கையாளுவதில் நீங்கள் நம்பத் தகாதவராய் இருந்தால் யார் உங்களை நம்பி உண்மைச் செல்வத்தை ஒப்படைப்பார்? பிறருக்கு உரியவற்றைக் கையாளுவதில் நீங்கள் நம்பத் தகாதவர்களாய்ப் போனால் உங்களுக்கு உரியவற்றை உங்களுக்குக் கொடுப்பவர் யார்? எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது; ஏனெனில்இ ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்துகொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

 

 

இன்றைய நற்செய்தி வாசகம் வழியாக மூன்று அறிவுரைகளை நமக்குத் தருகிறார் இயேசு. 1. நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். நம்மிடத்தில் உள்ள திறமைகள், ஆற்றல்கள், குறிப்பாக பணம்... இவற்றைக் கொண்டு நல்ல நண்பர்களை, குறிப்பாக மறுவுலக வாழ்வுக்கான நண்பர்களைத் தேடிக்கொள்ள வேண்டும். எனவே, செல்வம் சேர்த்து வைப்பதற்கல்ல. மாறாக, இறைவனுக்காகப் பயன்படத்துவதற்காக. அதை மனதில் கொள்வோம். 2. நேர்மையற்ற செல்வத்தைக் கையாள்வதிலேயே நம்பத்தகாதவராய் இருந்தால், உண்மைச் செல்வத்தை யார் ஒப்படைப்பார்? எனவே, நிதியை, குறிப்பாக பொது நிதியைக் கையாள்வதில் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் இருக்க வேண்டும். நிதியை நேர்மையோடு கையாள்பவர் மற்ற அனைத்தையும் கையாள்வதில் நம்பிக்கைக்குரியவராய் இருப்பார். 3.ஒரு வேலையாள் இரு தலைவர்களுக்கு ஊழியம் செய்யமுடியாது. நாம் இரு கடவுள்களை வழிபட முடியாது. கடவுளையும்இ காசையும் நாம் வழிபட முடியாது. செல்வத்தின்மீது அதிகப் பற்று சிலைவழிபாட்டுக்கு ஒப்பானது. எனவே, செல்வத்தைக் கடவுளுக்கு இணையாக்காமல் வாழ்வோம்.

மன்றாடுவோம்: செல்வத்தில் எல்லாம் பெருஞ்செல்வமான இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். இன்றைய நற்செய்தி வாசகம் வழியாக நீர் எங்களுக்குத் தருகின்ற இந்த மூன்று அறிவுரைகளையும் நாங்கள் ஏற்று செயல்பட எங்களுக்கு அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

 

15.09.2019

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-32

 

அக்காலத்தில் வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கி வந்தனர். பரிசேயரும் மறைநூல் அறிஞரும், "இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே'' என்று முணுமுணுத்தனர். அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: ஹஹஉங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற் போனதைக் கண்டுபிடிக்கும் வரை தேடிச்செல்ல மாட்டாரா? கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொள்வார்; வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ஹஎன்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற் போன என் ஆட்டைக் கண்டுபிடித்துவிட்டேன்' என்பார். அது போலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியைவிடஇ மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். பெண் ஒருவரிடம் இருந்த பத்துத் திராக்மாக்களுள் ஒன்று காணமாற் போய்விட்டால் அவர் எண்ணெய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும்வரை கவனமாகத் தேடுவதில்லையா? கண்டு பிடித்ததும்இ அவர் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, "என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன திராக்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன்' என்பார். அவ்வாறே மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கிறேன்.'' மேலும் இயேசு கூறியது: "ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கிஇ 'அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும்' என்றார். அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார். சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலை நாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார். அனைத்தையும் அவர் செலவழித்தார். பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்; எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார். அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார்; ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை. அவர் அறிவு தெளிந்தவராய், 'என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்கஇ நான் இங்குப் பசியால் சாகிறேனே! நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், 'அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன்' என்று சொல்லிக்கொண்டார். உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார். தொலையில் வந்துகொண்டிருந்தபோதே, அவர் தந்தை அவரைக் கண்டுஇ பரிவு கொண்டுஇ ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார். மகனோ அவரிடம், 'அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்' என்றார். தந்தை தம் பணியாளரை நோக்கிஇ ஹமுதல் தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும்இ காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்; கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம். ஏனெனில் என் மகன் இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்று வந்துள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்' என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள். அப்போது மூத்த மகன் வயலில் இருந்தார். அவர் திரும்பி வீட்டை நெருங்கி வந்துகொண்டிருந்தபோதுஇ ஆடல் பாடல்களைக் கேட்டுஇ ஊழியர்களுள் ஒருவரை வரவழைத்துஇ ஹஇதெல்லாம் என்ன?' என்று வினவினார். அதற்கு ஊழியர் அவரிடம்இ ஹஉம் தம்பி வந்திருக்கிறார். அவர் தம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால் உம் தந்தை கொழுத்த கன்றை அடித்திருக்கிறார்' என்றார். அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார். உடனே அவருடைய தந்தை வெளியே வந்து, அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார். அதற்கு அவர் தந்தையிடம், 'பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமைபோன்று உமக்கு வேலை செய்து வருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், என் நண்பரோடு நான் மகிழ்ந்து கொண்டாட ஓர் ஆட்டுக் குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை. ஆனால் விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துகளை எல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனேஇ இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே!' என்றார். அதற்குத் தந்தை, 'மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே. இப்போது நாம் மகிழ்ந்து கொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்' என்றார்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

 

 

நான் காணாமல் போன ஆடல்லவா !

 

ாணாமல் போன ஆடுஇ காணாமல் போன நாணயம் என்னும் இரண்டு அருமையான உவமைகளை இன்று வாசிக்கிறோம். எதையாவது தொலைந்துபோன அனுபவம் உள்ளவர்களுக்குத்தான்இ தொலைந்ததைக் கண்டுபிடிக்கும்போது உண்டாகும் பெருமகிழ்ச்சியின் பரிமாணம் புரியும். ஆடு ஒன்றை இழந்த மனிதன் காடு மேடெல்லாம் அலைந்து அதைத் தேடுகிறான். கண்டுபிடித்ததும் அதைத் தோள்மேல் போட்டுக்கொண்டு அயலாரோடும் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறார். அதுபோலத்தான் திராக்மாவை இழந்த பெண்ணும் அதைத் தேடிக் கண்டதும் மகிழ்ந்து தன் தோழியரோடு அதைக் கொண்டாடுகிறாள். அவ்வாறே மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என்கிறார் ஆண்டவர்.

ஒப்புரவு அருள்சாதனத்தில் கலந்துகொண்டுஇ பாவங்களை அறிக்கையிட்டு எவ்வளவு காலம் ஆகிவிட்டது என்று கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். பாவ அறிக்கை செய்யும்போது நமக்கு மட்டும் மன அமைதியும், மகிழ்ச்சியும் கிடைப்பதில்லை. வானதூதர்களும் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்னும் இயேசுவின் செய்தி நமக்கு வியப்பு கலந்த மகிழ்ச்சியைத் தருகிறது. ஒவ்வொரு முறையும் ஆண்டவரே, நான் பாவி, என்னை மன்னியும் என்று நாம் அறி;க்கையிடும்போதெல்லாம். விண்ணகத் தூதரிடையே நாம் மகிழ்ச்சியைஇ கொண்டாட்டத்தை உண்டாக்குகிறோம். இதை மனதில் கொண்டு, பாவ அறிக்கை செய்வோமா? வான்தூதருக்கு மகிழ்ச்சியைத் தருவோமா!

மன்றாடுவோம்: மன்னிப்பின் நாயகனே இறைவாஇ மனமாற்றம் என்னும் இனிய கொடைக்காக உமக்கு நன்றி கூறுகிறேன். ஒவ்வொரு முறையும் நான் பாவி என்று ஏற்று உம்மிடம் திரும்பி வருகின்றபொழுது வானகத் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாவதற்காக உம்மைப் போற்றுகிறேன். அந்த மன்னிப்பின், மனமாற்றத்தின் அனுபவத்தை எனக்க எப்போதும் தந்தருள்வீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி ஆமென்.

 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

08.09.2019

நற்செய்தி வாசகம்
லூக்கா நற்செய்தி்14: 25-33

 

அக்காலத்தில் பெருந்திரளான மக்கள் இயேசுவோடு சென்று கொண்டிருந்தனர். அவர் திரும்பிப் பார்த்து அவர்களிடம் கூறியது: ஹஹஎன்னிடம் வருபவர் தம் தந்தைஇ தாய்இ மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும் ஏன் தம் உயிரையுமே என்னை விட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது. தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்க முடியாது. உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால்இ முதலில் உட்கார்ந்துஇ அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணித்து, அதற்கான பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா எனப் பார்க்கமாட்டாரா? இல்லாவிட்டால் அதற்கு அடித்தளமிட்ட பிறகு அவர் கட்டி முடிக்க இயலாமல் இருப்பதைப் பார்க்கும் யாவரும் ஏளனமாகஇ ஹஇம்மனிதன் கட்டத் தொடங்கினான்; ஆனால் முடிக்க இயலவில்லை' என்பார்களே! வேறு ஓர் அரசரோடு போர் தொடுக்கப்போகும் அரசர் ஒருவர்இ இருபதாயிரம் பேருடன் தமக்கு எதிராக வருபவரைப் பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க முடியுமா என்று முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க மாட்டாரா? எதிர்க்க முடியாதெனில்இ அவர் தொலையில் இருக்கும்போதே தூதரை அனுப்பிஇ அமைதிக்கான வழியைத் தேடமாட்டாரா? அப்படியேஇ உங்களுள் தம் உடைமையை எல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

 

 

கடவுள்பொருட்டு அனைத்தையும் இழக்க.....

 

இயேசு இன்றைய நற்செய்தியில் கேட்டதை மக்களுக்குச்சொன்னபோதுஇ யெருசலேம் நோக்கி அவருடைய பயணம் அமைந்திருந்தது. தான் பாடுகளை நோக்கி சென்று கொண்டிருப்பது இயேசுவுக்குத் தெரியும். இயேசுவோடு சென்ற மக்கள் கூட்டம் அவர் அரசராகுவதற்காக யெருசலேம் செல்வதாக நினைத்திருக்க வேண்டும். ஆனால்இ தன்னை பின்தொடர்கிறவர்கள் இந்த உலக அதிகாரத்திற்காகஇ புகழுக்காக அல்லஇ மாறாகஇ இறையாட்சியின் பொருட்டு எந்த தியாகத்தையும் செய்வதற்கு தயாரானவர்களாக இருக்க வேண்டும் என்பதை இயேசு வலியுறுத்துகிறார்.

இயேசு தனக்கு நெருக்கமானவர்களை வெறுக்க வேண்டும் என்று சொன்னதாக அர்த்தம் கொள்ளக்கூடாது. இயேசுவின் மனநிலையில் நிச்சயமாக அவர் அப்படி சொல்லியிருக்க மாட்டார். இயேசு இங்கே சொல்ல விரும்புவது மற்றவர்களை விட கடவுளை அதிகம் அன்பு செய்ய வேண்டும் என்பதைத்தான். கடவுளன்பையும்இ நமக்கு நெருக்கமானவர்கள் மீது நாம் காட்டும் அன்பையும் ஒரே நேர்தட்டில் வைத்துப்பார்க்கக்கூடாது. கடவுளன்பு அனைத்தையும் விட மேலானது. கடவுளன்பிற்கு உள்ள மகத்துவத்தைஇ மகிமையை நாம் கொடுக்க வேண்டும். கடவுளன்புதான் நம் வாழ்வில் முதலிடம்.

எனது வாழ்வில் நான் யாருக்கு முதலிடம் கொடுக்கிறேன்? பணத்திற்கா? பாசத்திற்கா? புகழுக்கா? கடவுளன்பிற்கா? எனது வாழ்வில் நான் எப்போதும் கடவுளன்பை உணர்ந்துஇ அதற்காக நான் எதையும் இழக்கத்தயாராக வேண்டும். அப்படிப்பட்ட அன்பிற்காக இறைவனிடம் வேண்டுவோம்.


-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

01.09.2019

நற்செய்தி வாசகம்

லூக்கா நற்செய்தி14: 1,7-14

 

அக்காலத்தில் ஓய்வு நாள் ஒன்றில் இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றிருந்தார். அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர். விருந்தினர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தேர்ந்து கொண்டதை நோக்கிய இயேசு அவர்களுக்குக் கூறிய அறிவுரை: ``ஒருவர் உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால், பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களை விட மதிப்பிற்குரிய ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம். உங்களையும் அவரையும் அழைத்தவர் வந்து உங்களிடத்தில், `இவருக்கு இடத்தை விட்டுக்கொடுங்கள்' என்பார். அப்பொழுது நீங்கள் வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும். நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும்போது, போய்க் கடைசி இடத்தில் அமருங்கள். அப்பொழுது உங்களை அழைத்தவர் வந்து உங்களிடம், `நண்பரே, முதல் இடத்திற்கு வாரும்' எனச் சொல்லும்பொழுது உங்களுடன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் யாவருக்கும் முன்பாக நீங்கள் பெருமை அடைவீர்கள். தம்மைத் தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர். '' பிறகு தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம் இயேசு, ``நீர் பகல் உணவோ இரவு உணவோ அளிக்கும்போது உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். அப்பொழுது அதுவே உமக்குக் கைம்மாறு ஆகிவிடும். மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும். அப்போது நீர் பேறுபெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும்'' என்று கூறினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

தாழ்ந்தோரால் மாட்சி !

“தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்படுவர்” என்னும் இன்றைய மையக் கருத்தினை முதல் மற்றும் நற்செய்தி வாசகங்களில் காண்கிறோம். மானிட வாழ்வின் சுவைமிகு முரண்பாடுகளுள் இதுவும் ஒன்று. வலிமையுடையோர் எப்போதும் வெற்றி பெறமுடிவதில்லை. வலிமை குன்றியவர்களும் வெல்ல முடிகிறது. அதுபோல, நெஞ்சிலே செருக்குற்றோர் எப்போதும் இறைவனால் சிதறடிக்கப்படுகின்றனர். தம்மையே தாழ்த்திக் கொள்பவர்களுக்கு இறைவனின் முன்னிலையில் பரிவு கிடைக்கும் என்று இன்றைய முதல் வாசகம்- சீராக்கின் ஞானநூல் தெரிவிக்கிறது. “ ஆண்டவரின் ஆற்றல் பெரிது. ஆயினும், தாழ்ந்தோரால் அவர் மாட்சி பெறுகிறார்” என்று வாசிக்கிறோம். எனவே, வாசகம் தொடங்கும் முதல் வாக்கியத்தை மீண்டும் கவனிப்போம்: “குழந்தாய், நீ செய்வது அனைத்தையும் பணிவோடு செய்”. நம் இதயத்தில் தாழ்ச்சியை, பணிவை வளர்த்துக்கொள்வோம்.

மன்றாடுவோம்: தாழ்ந்தோரை உயர்த்தும் இறைவா, உம்மைப் போற்றுகிறோம். இதயத்தில் தாழ்ச்சியும், பணிவும் மிக்கவர்களாக நாங்கள் வாழ, பணிபுரிய அருள்தாரும். எங்கள் வாழ்விலும், பணியிலும் நீரே மாட்சி அடைவீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

25.08.2019

நற்செய்தி வாசகம்

லூக்கா நற்செய்தி 13: 22-30

 

அக்காலத்தில் இயேசு நகர்கள், ஊர்கள் தோறும் கற்பித்துக் கொண்டே எருசலேம் நோக்கிப் பயணம் செய்தார். அப்பொழுது ஒருவர் அவரிடம், ``ஆண்டவரே, மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா?'' என்று கேட்டார். அதற்கு அவர் அவர்களிடம் கூறியது: ``இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும். `வீட்டு உரிமையாளரே, எழுந்து கதவைத் திறந்துவிடும்' என்று கேட்பீர்கள். அவரோ, `நீங்கள் எங்கிருந்து வந்தவர்கள் என எனக்குத் தெரியாது' எனப் பதில் கூறுவார். அப்பொழுது நீங்கள், `நாங்கள் உம்மோடு உணவு உண்டோம், குடித்தோம். நீர் எங்கள் வீதிகளில் கற்பித்தீரே' என்று சொல்வீர்கள். ஆனாலும் அவர், `நீங்கள் எவ்விடத்தாரோ எனக்குத் தெரியாது. தீங்கு செய்வோரே, அனைவரும் என்னை விட்டு அகன்று போங்கள்' என உங்களிடம் சொல்வார். ஆபிரகாமும் ஈசாக்கும் யாக்கோபும் இறைவாக்கினர் யாவரும் இறையாட்சிக்கு உட்பட்டிருப்பதையும் நீங்கள் புறம்பே தள்ளப்பட்டிருப்பதையும் பார்க்கும்போது அழுது அங்கலாய்ப்பீர்கள். இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள். ஆம், கடைசியானோர் முதன்மையாவர்; முதன்மையானோர் கடைசியாவர்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

நேரிய வழியில் நடப்போம்

வாழ்வுக்குச் செல்லக்கூடிய வழி அவ்வளவு எளிதானதல்ல. அது மிகவும் கடினமானது. நம்முடைய உழைப்பில்லாமல், அர்ப்பணம் இல்லாமல் நிச்சயமாக நம்மால் மீட்பு பெற முடியாது. நாம் அனைவருமே கடவுள் விரும்பக்கூடிய வாழ்வை வாழ வேண்டும். அப்படி வாழ்கிறபோதுதான், நாம் கடவுளின் அன்பைப் பெற்று, அவரது விருந்திலே பங்கெடுக்க முடியும்.

எது எளிதானதோ, அவ்வழியில் செல்லவே அனைவரும் விரும்புவர். கடினமான வழியில் செல்ல எவருமே விரும்ப மாட்டார்கள். கடினமாக உழைத்துப்படிக்கலாம். தவறான வழியில் எளிதாகவும் மதிப்பெண் வாங்கலாம். இந்த உலகம் இரண்டாவது வழியைத்தான் தேர்ந்தெடுக்கும். இந்த உலகத்தில் இருக்கிற பலரும், இந்த இரண்டாம் வழியைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். உண்மையாக வாழ வேண்டும் என்று நினைக்கிறவர்களை, இந்த உலகம் அவமானப்படுத்துகிறது. கேலி செய்கிறது. உதாசீனப்படுத்துகிறது. அவர்களுக்கு ஏராளமான சங்கடங்கள் வாழ்வில் இருந்தாலும், அவர்கள் பெறக்கூடிய பரிசு மிகப்பெரிதானது.

நமது வாழ்வில் நாம் எத்தகைய வழியைத் தேர்ந்தெடுக்கிறோம்? என்று கேட்டுப்பார்ப்போம். எப்போதுமே, உண்மையான, நேர்மையான பாதையில் நடக்க விரும்புகிறவர்கள் பலவிதமான சோதனைகளுக்கும், சங்கடங்களுக்கும் உள்ளாவார்கள். அப்படி இருந்தாலும், கடவுளின் துணைகொண்டு நாம் நேரிய வழியில் நடப்போம்.

 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

18.08.2019

நற்செய்தி வாசகம்

லூக்கா நற்செய்தி்12: 49-53

 

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``மண்ணுலகில் தீ மூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்துகொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். ஆயினும் நான் பெற வேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன். மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன். இதுமுதல் ஒரு வீட்டிலுள்ள ஐவருள் இருவருக்கு எதிராக மூவரும் மூவருக்கு எதிராக இருவரும் பிரிந்திருப்பர். தந்தை மகனுக்கும், மகன் தந்தைக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் தன் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் எதிராகப் பிரிந்திருப்பர்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

 

இயேசு இந்த உலகத்தில் இருப்பதை, இருப்பதுபோல வைத்துவிட்டுச் செல்ல வேண்டும் என்பதற்காக வரவில்லை. அப்படி ஒரு எண்ணம் இருந்திருந்தால், அவர் இந்த மண்ணகத்திற்கு வந்திருக்கவே மாட்டார். இந்த மண்ணகத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்று வருகிறார்.

 

எதனை கொண்டு வருவதற்கு இயேசு முயற்சி எடுக்கிறார்?

 

இந்த மண்ணத்தில் என்ன மாற்றம் தேவை? எதனை கொண்டு வருவதற்கு இயேசு முயற்சி எடுக்கிறார்? இந்த உலகத்தில் விழுமியங்களும், மதிப்பீடுகளும் மறக்கடிக்கப்பட்டு, அதிகாரமும், ஆணவமும், தான்தோன்றித்தனமும் நிறைந்திருந்தது. பதவி இருந்தால் எப்படியும் ஆளலாம், எப்படியும் வாழலாம் என்றிருந்தது. ஏழைகள், எளியவர்களை அடக்கி ஆளும் மனநிலை நிறைந்திருந்தது. இத்தகைய தீய மதிப்பீடுகள் களையப்பட வேண்டும், உண்மையான, இறையாட்சியின் மதிப்பீடுகள் இந்த உலகத்திற்கு எடுத்துரைக்கப்பட வேண்டும். அதற்கு மிகப்பெரிய மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று இயேசு விரும்பினார். இயேசு கொண்டு வந்த மாற்றத்தை, நாமும் அவரோடு இணைந்தால் தான் செயல்படுத்த முடியும். நாம் அவரோடு இணைய வேண்டும் என்று இயேசு நம்மை எதிர்பார்க்கிறார்.

இயேசுவின் மதிப்பீடுகளையும், விழுமியங்களையும் வாழ்வாக்க, நாம் தயாராக இருக்கிறோமா? எப்படி அதனை செயல்படுத்த போகிறோம்? என்று நாம் சிந்தித்துப் பார்ப்போம். இயேசுவின் வாழ்க்கை, அவரது போதனை நம்மில் எத்தகைய மாற்றத்தைக் கொண்டுவரப்போகிறது? என்று சிந்தித்து செயல்படுவோம்.


 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மேல் செல்ல