mariya

 

வாசகர்கள்

visitor counter  

 

 

திருத்தந்தை 06 may2020

அன்னை மரியாவிடம் சக்தி வாய்ந்த ஒரு வேண்டுதல்:

 

அன்னை மரியாவை நோக்கி சிறப்பான வேண்டுதல்களை, மே மாதம் 8ம் தேதி, வருகிற வெள்ளியன்று மேற்கொள்ளுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

(விபரம்)

----------------------------------------------------------------------------------------------------

திருத்தந்தை 06 may2020

 

செபம் என்பது விசுவாசத்தின் உயிர் மூச்சு :
நம் மீட்பிற்கான விசுவாச அழுகுரல், இறைவனின் இரக்கத்தையும் வல்லமையையும் நம்மை நோக்கித் திருப்புகிறது.

(விபரம்)

-----------------------------------------------------------------------------------------------------

திருத்தந்தை 25 April 2020

இல்லங்களில் செபமாலை செபிக்க திருத்தந்தை அழைப்பு.

 

செபமாலை செபிக்க, குறிப்பாக, அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மே மாதத்தில், செபமாலை செபிக்க, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விசுவாசிகளை ஊக்கப்படுத்தியுள்ளார்.

 

அன்னை மரியாவுக்கென அர்ப்பணிக்கப்பட்டுள்ள மே மாதத்தில்இ இல்லங்களில் செபமாலை செபிப்பதன் அழகைக் கண்டுணருமாறு அனைத்து கத்தோலிக்கருக்கும் அழைப்பு விடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

 

--------------------------------------------------------------------------------------------------

 

திருத்தந்தை 04 April 2020

சோதனைக்கு எதிராய்ப் போராடுவோம்.

 

தற்போதைய கோவிட்-19 நெருக்கடி சூழலைப் பயன்படுத்தி ஆதாயம் தேடும் சோதனைக்கு உள்ளாகும் மக்களுக்காகச் செபிப்போம்.

 

நாம் பாவத்தில் இருக்கிறோம் என்று அறிந்தவுடன், முதலாவதாக, ஆண்டவரிடம் சென்று அவரின் மன்னிப்பை இறைஞ்ச வேண்டும், அடுத்து, இந்தப் பாவத்தில் எவ்வாறு வீழ்ந்தேன்? இது என்னில் எவ்வாறு வளர்ந்தது? இதற்கு யார் காரணம்? இதில் வீழ்வதற்கு எவ்வாறு என்னையே நியாயப்படுத்தினேன்? என்று நம்மையே நாம் கேட்டுக்கொள்ள வேண்டும் என்று திருத்தந்தை கூறினார்.

(மேலும்)

 

---------------------------------------------------------------------------------------------------

 

திருத்தந்தை 04 April 2020

உயிர்த்த இயேசுவில், வாழ்வு, மரணத்தை வென்றது.

 

துன்புறுவோர், சிறார், வயதானவர்கள் மீது கனிவு காட்டுங்கள், திருத்தந்தை அவர்களுக்கு நெருக்கமாக இருந்து செபிக்கிறார் என்று அவர்களிடம் சொல்லுங்கள், நம் ஆண்டவர் விரைவில் நம்மைத் தீமையிலிருந்து விடுவிப்பார்.

(மேலும்)

 

----------------------------------------------------------------------------------------------------

 

திருத்தந்தை 02 April 2020, 13:54

தனிமையில் துன்பப்படுவோருக்காக செபிப்போம்

 

நம்மை என்றும் நினைவில் வைத்திருப்பது, இறைவனின் இலக்கணம், நாம்தான், அவரை மறந்து வாழ்கிறோம்.

 

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 2, இவ்வியாழன் காலை, சாந்தா மார்த்தா இல்லத்தில் நிறைவேற்றிய திருப்பலியைஇ இந்த உலகளாவிய நெருக்கடி நேரத்தில், தங்குவதற்கு இடமின்றி இருப்பவர்களுக்கும், யாருக்கும் தெரியாமல், தனிமையில் துன்பப்படுவோருக்கும் ஒப்புக்கொடுத்தார்.
(மேலும்)

---------------------------------------------------------------------------------------------------------

 

 

கோவிட் 19 - புனித வெள்ளியன்று சிறப்பு மன்றாட்டு

 

கோவிட் 19 தொற்றுநோயை முடிவுக்குக் கொணர இறைவனிடம் மன்றாடும் ஒரு சிறப்புக் கருத்து திருப்பலியை திருவழிபாட்டுப் பேராயம் பரிந்துரைத்துள்ளது.

 

புனித வாரத்தின் வெள்ளியன்று நடைபெறும் ஆண்டவருடைய பாடுகள் மற்றும் திருச்சிலுவை வணக்கம் ஆகிய வழிபாட்டு நிகழ்வுகளில், திருஅவை, திருத்தந்தை, திருமுழுக்கு பெற தயாரிப்போர் உட்பட பல்வேறு தேவைகளுக்காக எழுப்பப்படும் மன்றாட்டுக்களில், இவ்வாண்டு, குறிப்பாக, கோவிட்-19 தொற்றுக்கிருமியின் தாக்கத்திலிருந்து இறைவன் இவ்வுலகைக் காக்கவேண்டுமென்ற ஒரு சிறப்பு மன்றாட்டை இணைக்கும்படி, திருவழிபாட்டு பேராயம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
(மேலும்)

----------------------------------------------------------------------------------------------

திருத்தந்தை 29 March 2020

அழுதுகொண்டிருக்கும் மக்களை நினைக்கின்றேன்.

 

தவக்கால ஐந்தாம் ஞாயிறு, கண்ணீர் சிந்தும் ஞாயிறாக அமையட்டும் என்று, ஞாயிறு காலையில் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்

இந்நாள்களில் பலர் அழுதுகொண்டிருக்கின்றனர், நாமும் நம் இதயங்களால் அவர்களுடன் தோழமை கொள்வோம், நம் ஆண்டவர் தம் மக்கள் அனைவருக்காவும் கண்ணீர் சிந்தினார், நாமும், துன்புறும் மக்களுக்காகச் சிறிதளவு கண்ணீர் சிந்தினால் அது எத்தீங்கையும் நமக்கு கொணராது என்றும் திருத்தந்தை கூறி இஞ்ஞாயிறு திருப்பலியைத் துவக்கினார்.
(மேலும)

---------------------------------------------------------------------------------------------

 

திருத்தந்தை 27 March 2020

இவ்வெள்ளி மாலையில் திருத்தந்தையோடு செபிக்கும் முறை


சிறப்பு 'ஊர்பி எத் ஓர்பி (Urbi et Orbi)' ஆசீர்

 

கொரோனா தொற்றுக்கிருமி அவசரகால நெருக்கடியை முன்னிட்டு, மார்ச் 27, இவ்வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தும், செபம் மற்றும், ஊருக்கும், அதாவது உரோம் நகருக்கும், உலகுக்குமென வழங்கும் 'ஊர்பி எத் ஓர்பி (Urbi et Orbi)' சிறப்பு ஆசீர், வத்திக்கான் செய்தித்துறை அலைவரிசைகள் வழியாக நேரடி ஒலி மற்றும்இ ஒளிபரப்பு செய்யப்படும்.

மக்கள் யாருமின்றி காலியாக இருக்கும் வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில், மார்ச் 27 இவ்வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணிக்கு, அதாவது இந்திய-இலங்கை நேரம் இவ்வெள்ளி இரவு 10.30 மணிக்கு, உலகின் அனைத்து கத்தோலிக்கரும் சமூகத்தொடர்பு சாதனங்கள் வழியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தும் செபத்தில் ஆன்மீக முறையில் ஒன்றித்திருக்க வேண்டும் என அழைக்கப்பட்டுள்ளனர்.

 

(மேலும்)

 

----------------------------------------------------------------------------------------------------------

 

திருத்தந்தை 25 March 2020

திருத்தந்தையின் மறைக்கல்வியுரை - மங்கள வார்த்தை விழா

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர், மனித வாழ்வின் மதிப்பு மற்றும் மீறமுடியாத தன்மை குறித்த எவாஞ்சலியம் வித்தே என்ற ஏட்டினை வெளியிட்டார் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால்.

(மேலும்)

 

.................................................................................................................................................

 

திருத்தந்தை 23 March 2020

நம் விசுவாசத்தை மேலும் அதிகரிக்கும்படி இறைவனை மன்றாடுவோம் .

 

நம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும், துணிச்சலுடனும் நாம் செபிக்கும்போது, இறைவன் நமக்கு பதிலுரைக்க காலம் தாழ்த்தினாலும், நம்மை ஒருபோதும் ஏமாற்றுவதில்லை.

----------------------------------------------------------------------------------------------------------

திருத்தந்தை 23 March 2020

புது ஒளியை வழங்குகிறார் இறைவன்

 

உறவினர்களின் அருகாமையின்றி தனிமையில் இறந்துவரும் மக்களுக்காகவும், அவர்களின் குடும்பத்தினருக்காகவும் செபிப்போம்.

 

-----------------------------------------------------------------------------------------------------------

திருத்தந்தை 22 March 2020

மார்ச் 25இ பகல் 12 மணிக்கு இயேசு கற்றுக்கொடுத்த செபம்.

 

கொரோனா தொற்றுக்கிருமி அச்சுறுத்தலால் மனித சமுதாயம் முழுவதும் அச்சத்தால் நடுங்கிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், அனைத்துக் கிறிஸ்தவர்களும் ஒன்றுசேர்ந்து ஒரே குரலாய் இறைத்தந்தையை நோக்கி விண்ணப்பிக்குமாறு பரிந்துரைக்கிறேன்

------------------------------------------------------------------------------------------------------------

 

திருத்தந்தை 22 March 2020

செபம் வழி நோயாளிகளின் அருகிலிருப்போம்.

 

தொற்று நோயின் அச்சுறுத்தலை இவ்வுலகம் எதிர்கொண்டுவரும் வேளையில், அனைவரும் ஒன்றிணைந்து விண்ணுலகை நோக்கி நம் குரலை எழுப்புவோம்

 

--------------------------------------------------------------------------------------------------------------

திருத்தந்தை 21 March 2020, 15:02

 

இறைவேண்டல், தாழ்ச்சியுடன் துவங்கப்பட வேண்டும்

 

வீடுகளிலேயே தங்க வேண்டிய சூழலை எதிர்கொள்ளும் குடும்பங்கள், குடும்பத்திற்குள் எவ்வாறு அன்பின் உறவுகளைக் கட்டியெழுப்புவது, எவ்வாறு ஒருவருக்கொருவர் நன்றாக வெளிப்படுத்துவது போன்ற வழிகளை அறிந்து கொள்வார்களாக

 

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

 

கொரோனா தொற்றுக்கிருமியின் நெருக்கடியால் வீடுகளைவிட்டு வெளியேற முடியாமல் இருக்கும் குடும்பங்களை, இத்திருப்பலியில் நினைக்க விரும்புகிறேன் என்றுஇ மார்ச் 21இ இச்சனிக்கிழமை காலையில் திருப்பலியை ஆரம்பித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

 

வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில்இ இந்நாள்களில்இ ஒவ்வொரு நாள் காலை ஏழு மணிக்குத் திருப்பலி நிறைவேற்றி, கோவிட்-19 தொற்றுக்கிருமியின் தாக்கத்தால் துன்புறும் எல்லாருக்காகவும் இறைவனை மன்றாடிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமை காலையில் குடும்பங்களுக்காக திருப்பலியை ஒப்புக்கொடுத்தார்.

வீடுகளிலேயே தங்க வேண்டிய சூழலை எதிர்கொள்ளும் குடும்பங்கள்இ அதிகபட்சம் அவர்களின் மேல்மாடங்களுக்கு மட்டுமே செல்ல முடிகின்றதுஇ குடும்பத்திற்குள் எவ்வாறு அன்பின் உறவுகளைக் கட்டியெழுப்புவதுஇ ஒருவருக்கொருவர் எவ்வாறு நன்றாக வெளிப்படுத்துவது போன்ற வழிகளை அவர்கள் அறிந்து கொள்வார்களாக என்று கூறினார்இ திருத்தந்தை பிரான்சிஸ்.

வேதனை நிறைந்த இந்த நேரத்தை, குடும்பத்தில் எல்லாரும் சேர்ந்து எவ்வாறு வாழ்வதென்பது குறித்து அவர்கள் அறியவும்இ இந்நெருக்கடிவேளையில் குடும்பங்களில் அமைதியும்இ படைப்பாற்றல் திறனும் வளரவும் செபிப்போம் என்றும், திருப்பலியின் ஆரம்பத்தில் திருத்தந்தை கூறினார்.

 

மறையுரை
இத்திருப்பலியில் ஆற்றிய மறையுரையில், இரு வெவ்வேறு முறைகளில் கடவுளை அணுகுவது பற்றிக் கூறும் இன்றைய நற்செய்திப் பகுதியை (லூக்.18:9-14) மையப்படுத்தி தன் சிந்தனைகளை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

 

ஆண்டவரிடம் திரும்புவோம்

'வாருங்கள்இ ஆண்டவரிடம் நாம் திரும்புவோம்; நம்மைக் காயப்படுத்தியவர் அவரேஇ அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்து நொறுக்கியவர் அவரேஇ அவரே நம் காயங்களைக் கட்டுவார்இ நாம் அறிவடைவோமாகஇ ஆண்டவரைப்பற்றி அறிய முனைந்திடுவோமாக; அவருடைய புறப்பாடு புலரும் பொழுதுபோல் திண்ணமானது (ஓசே.6:1-6) என்ற இன்றைய முதல் வாசகப் பகுதியைக் குறிப்பிட்டு மறையுரையைத் தொடங்கினார்இ திருத்தந்தை.

இந்த ஒரு நம்பிக்கையில்இ மக்கள் ஆண்டவரிடம் திரும்பும் தங்களது பயணத்தைத் தொடங்கினர்இ ஆண்டவரைக் கண்டுகொள்ளும் வழிகளில் ஒன்று இறைவேண்டல் என்று கூறியத் திருத்தந்தைஇ ஆண்டவரிடம் மன்றாடுவோம்இ அவரிடம் திரும்புவோம் என்றும் கூறினார்.

ஆண்டவரை அணுகும் இரு வெவ்வேறு விதமான முறைகள் பற்றியும் மறையுரையில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்இ 'மூத்த மகனும்இ காணாமல் மகனும்'இ 'செல்வரும் ஏழை இலாசரும்', 'பரிசேயரும் வரிதண்டுபவரும்' ஆகிய மூன்று நற்செய்தி பகுதிகளை எடுத்துக்காட்டாக எடுத்துரைத்தார்.

இன்றைய நற்செய்தியில் கூறப்பட்டுள்ள பரிசேயரின் இறைவேண்டல்இ தன்னைப் பற்றி பெருமையாகப் பேசுவதாகவும், வரிதண்டுபவர் பீடத்தைக்கூட நெருங்காமல், தொலைவில் நின்றுகொண்டே, கடவுளே, நான் பாவி, என் மீது இரங்கும் என்று செபிப்பதாகவும் உள்ளது என்ற திருத்தந்தை, இவ்வாறுஇ தன்னிடம் நெருங்கி வருவது எவ்வாறு என்பது பற்றி, ஆண்டவர் நமக்குக் கற்றுக்கொடுக்கிறார் என்று திருத்தந்தை கூறினார்.

 

திருத்தந்தையின் செபம்

நம் புண்ணியங்களைப் பட்டியலிடாமல், திறந்த இதயத்தோடு, தாழ்ச்சியுடன் செபிக்க வேண்டும் என்று கூறியத் திருத்தந்தை, நான் பாவி என்று வாயால் அல்லஇ மாறாக, நம் இதயத்தால் சொல்வதே உண்மையானது என்றும், செபிக்கத் தொடங்குவதற்குத் தேவையான இந்த மனநிலையை புரிந்துகொள்வதற்கு ஆண்டவர் நமக்குக் கற்றுக்கொடுப்பாராக என்றும் கூறினார்.

நம்மையே நியாயப்படுத்திக்கொண்டு, நம் பாதுகாப்புக்களைச் சொல்லித் தொடங்குவது செபம் அல்ல, அது கண்ணாடிமுன் நின்று பேசுவது போலாகும், மாறாக, நான் பாவி என்ற உண்மையான மனநிலையோடு செபத்தைத் தொடங்க வேண்டும் என்று திருத்தந்தை மறையுரையை நிறைவு செய்தார்.

 

திருநற்கருணை ஆசீர்

இத்திருப்பலியின் இறுதியில் திருநற்கருணை ஆராதனை வழிபாட்டை சில நிமிடங்கள் நிறைவேற்றி, திருநற்கருணை ஆசீரையும் திருத்தந்தை வழங்கினார். ஆன்மீக முறையில் திருநற்கருணை வாங்குவதற்கு உதவியாகஇ ஒரு சிறிய செபத்தையும் திருத்தந்தை செபித்தார்.

-------------------------------------------------------------------------------------------------------------------------

திருத்தந்தை 20 March 2020, 15:18


அருள்பணியாளர் இல்லாதபோது ஒப்புரவு அருளடையாளம்

 

ஒப்புரவு அருளடையாளத்தைப் பெறுவதற்கு ஓர் அருள்பணியாளரைக் கண்டுபிடிக்க முடியவில்லையெனில்இ கடவுளோடு உரையாடுங்கள்.

 

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

 

அவசரகால நேரங்களில் ஒப்புரவு அருளடையாளத்தை எவ்வாறு பெறுவது என்பது குறித்துஇ மார்ச் 20இ இவ்வெள்ளி காலையில்இ சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் விளக்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

 

இயேசுவின் உயிர்ப்பு பெருவிழாவுக்குமுன் உங்களில் பலர் ஒப்புரவு அருளடையாளத்தைப் பெறச் செல்வீர்கள்இ கொரோனா தொற்றுக்கிருமி தாக்கத்தால் எல்லாரும் வீடுகளிலேயே இருக்கவேண்டிய நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளதுஇ நான் ஆண்டவரோடு சமாதானம் செய்துகொள்ள விரும்புகிறேன், அவர் என்னைத் தழுவிக்கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன்இ அருள்பணியாளர் இல்லாமல் இதை நான் எப்படி செய்வது என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகின்றது என்று திருத்தந்தை கூறினார்.

 

கடவுளோடு உரையாடுங்கள்

அருள்பணியாளர் இல்லாமல் கடவுளின் மன்னிப்பை பெறும் முறை பற்றி மறைக்கல்வி கூறுவதுபோல் செயல்படுங்கள்இ ஒப்புரவு அருளடையாளத்தைப் பெறுவதற்கு ஓர் அருள்பணியாளரைக் கண்டுபிடிக்க முடியவில்லையெனில்இ கடவுளோடு உரையாடுங்கள்இ அவர் உங்கள் தந்தைஇ ஆண்டவரேஇ நான் இதைஇ அதைச் செய்தேன்இ என்னை மன்னித்தருளும் என்று அவரிடம் கூறுங்கள் என்று எடுத்துரைத்தார்இ திருத்தந்தை பிரான்சிஸ்.

உள்ளம் நொறுங்குண்டவர்களாய்இ உங்கள் முழு இதயத்தோடு ஆண்டவரிடம் மன்னிப்பை இறைஞ்சுங்கள்இ பிறகு ஒப்புரவு அருளடையாளம் பெறச் செல்வேன் என்று அவரிடம் வாக்குக்கொடுங்கள் என்றுரைத்த திருத்தந்தைஇ நீங்கள் கடவுளின் அருளுக்கு உடனடியாகத் திரும்புவீர்கள்இ நீங்களே அவர் பக்கம் ஈர்க்கப்படுவீர்கள் என்று கூறினார்.

வீட்டிற்குத் திரும்பும் பழக்கம்இ ஒப்புரவு அருளடையாளத்தில் உயிர் பெறுதலாகும் என்றும்இ திருத்தந்தை விளக்கினார்.